ஆளுநர் உரை வாசிக்காமல் வெளியேறியதால் சட்டப்பேரவையில் சர்ச்சை. தேசிய கீதம் இசைக்கப்படாததையும், நேரலை ஒளிபரப்பு தணிக்கை செய்யப்பட்டதையும் ஆளுநர் மாளிகை கண்டித்துள்ளது. மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
2025ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமலே வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் கூறினார். அதற்கு முதல்வரும் சபாநாயகரும் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் மரபு என்றும் அதன்படியே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநருக்காக மரபை மாற்றம் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
DRDO அதிகாரியிடம் 13 லட்சம் அபேஸ்! சைபர் கிரிமினல்களிடம் இப்படி சிக்காதீங்க!
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)இந்நிலையி்ல், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யாததைக் கண்டித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:
"இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன.
தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல."
இவ்வாறு ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜியோவின் சூப்பர் பட்ஜெட் பிளான்! 11 மாத வேலிடிட்டியுடன் 1234 ரீசார்ஜ்!