விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

Published : Jan 30, 2022, 04:43 PM IST
விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த செல்வக் குமார்,  அம்மன் கோவில்பட்டி புதூரில்  நடத்தி வந்த பொம்மி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு ஆறுமுகம் சம்பவ இடத்திலே  பலியாக, போர்மேன் தெய்வேந்திரன், தொழிலாளி குபேந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிவகாசி அருசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குபேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் காரணமாக பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் செல்வகுமரை  இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர், நாட்டார்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம் மற்றும் குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர்களுக்கு ஒரு இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!