உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதி... ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!!

Published : Jan 30, 2022, 03:29 PM IST
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதி... ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!!

சுருக்கம்

உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளுக்கும் ,நகராட்சி ,மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம்  நடத்தப்பட்டது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளுக்கும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்த அரசாணையில், 5வது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.133 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும்  மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.532 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 800 என 2021-22 ஆம் ஆண்டிற்கு முதல் தவணை நிதியாக ரூ.665 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 2500 கிலோ மீட்டர் தூர அளவிலான சாலைகள் இந்த நிதியின் வாயிலாக மேம்படுத்தப்படும். மற்றும் இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!