முக்கிய செய்தி.. வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி..மாநகராட்சி உத்தரவு

Published : Jan 30, 2022, 02:36 PM IST
முக்கிய செய்தி.. வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி..மாநகராட்சி உத்தரவு

சுருக்கம்

சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் செல்லவதற்கு அனுமதியளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதி மற்றும் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. தினசரி கொரோனா தொற்று 1000க்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. அதே போல், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் புதிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்தது. இதனால் கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுபாடுகள் அரசு விதித்தது. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடற்கரைக்கு செல்ல தடை, பூங்காக்களுக்கு மக்கள் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. 

இதினிடையே தமிழகத்திலும் கடந்த 7 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. முந்தைய நாள் பாதிப்பு 26,533  ஆக இருந்த நிலையில் நேற்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,115 ஆக குறைந்து 24,418 ஆக பதிவாகியுள்ளது. 1,31,684 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 24,418 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 4,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் குறைந்து கொரோனா எண்ணிக்கை 4,508 ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்ட முடிவில் கொரோனா ஊரடங்கை பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நீட்டித்து, பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்தது. அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 - 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெறவுள்ளன. அனைத்து பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் பிப்.,1 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல், இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே தற்போது சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட் அனைத்து கடற்கரைகளுக்கு வருகிற செவ்வாய்க்கிழமை முதல் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர்,காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கு மக்கள் செல்லவதற்கு வரும் பிப்ரவரி 1 தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!