
பல்வேறு தடைகளை கடந்த தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ் பந்தயம் பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு பீட்டா அமைப்பால் எழுந்த தடைகளை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல்எழுந்தது.
இதனை எதிர்த்தும், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திய அமைதிப்போராட்டத்தின்காரணமாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நிக்கியது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடந்து வரும் சூழலில், தேனி மாவட்டம் தேவாரத்தில் இரட்டை மாட்டுவண்டிப்பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக தேவாரத்தை சுற்றியுள்ள கம்பம், தேவாரம், சின்னமனூர், கோட்டுர், பண்ணைப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான இரட்டைமாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
தேவாரம் தொடங்கி போடி சங்கராபுரம் வரை நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, பொது மக்கள் கரகோஷம் எழுப்பி, போட்டியாளர்களைஉற்சாகப்படுத்தினர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.