இவ்வளவு பிரச்சனைக்கும் ஓபிஎஸ் தான் காரணம்! அதிகாரம் வேணும்னா எந்த எல்லைக்கும் செல்வார்! ஆர்.பி. உதயகுமார்!

Published : Feb 18, 2025, 01:17 PM ISTUpdated : Feb 18, 2025, 01:26 PM IST
இவ்வளவு பிரச்சனைக்கும் ஓபிஎஸ் தான் காரணம்! அதிகாரம் வேணும்னா எந்த எல்லைக்கும் செல்வார்! ஆர்.பி. உதயகுமார்!

சுருக்கம்

ஜெயலலிதா தன் மீது நம்பிக்கை இழந்ததாக ஓபிஎஸ் கூறியதற்கு உதயகுமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்: ஓபிஎஸ் 6 மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து கொள்வோம் என அண்ணன் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியுள்ளார். நான் அமைதியாக இருக்க வேண்டும் என என்ன காரணத்துக்காக அவர் சொன்னார் என்பது தெரியவில்லை. இப்பிரச்சினை யாரால் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். என்னை அழைத்துக் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என சொல்லவில்லை. எனக்கு சிபாரிசு செய்வதாக ராஜன் செல்லப்பா சொல்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை என்றார். 

இதையும் படிங்க: விளையாட்டா போச்சா? இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது! அண்ணாமலை!

அதிமுக முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் பற்றி தெரியாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகிறார். அவர் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர் வெங்கடேசன் வீட்டில் எனது மகனுக்கு பேரவையில் மாவட்ட பதவி வழங்க கூறியபோது, அவர் எங்கே உட்கார்ந்து இருந்தார் என்பதை சொன்னால் அது அரசியல் அநாகரிகம் என கூறியிருந்தார்.  மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விரைவில் ஒரு தொண்டர் வருவார். பொதுச்செயலாளர் பதவியே இருக்காது. அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் தன்னிடம் உள்ளது. ஆனால் அதை இப்போது பகிரங்கமாக சொல்லக்கூடிய நிலைமை தற்போது இல்லை என கூறினார். 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்: ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். ஆனால், அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தன்னிடமே ஜெயலலிதா கூறினார். அதன் விளைவாகவே, 2010-ம் ஆண்டு, தேனியின் அதிகார மையம் என்று கூறிக்கொண்ட ஓபிஎஸ்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு, அங்கு நடந்த முல்லை பெரியாறு உரிமை போராட்டத்திற்கு, தன்னை தலைமை தாங்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

அதேபோல், டாக்டர் வெங்கடேசன் சந்திப்பின்போது, ஓபிஎஸ் எங்கு அமர்ந்திருந்தாரோ அங்குதான் தான் அமர்ந்திருந்ததாகவும், அதனால் அரசியல் நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டதை, தயவுகூர்ந்து சொல்லுமாறும் ஓபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டார். மேலும், அதிகாரம் வேண்டுமென்றால் ஓபிஎஸ் அமைதியாக இருப்பார் என்றும், அதிகாரம் இல்லை என்றால் அவர் எந்த எல்லைக்கும் செல்வார். அதிமுக ஒற்றுமையாக இருப்பதற்கு யாரும் தடையாக இல்லை என்பதை தொண்டர்கள் அறிவர். ஒற்றுமைக்காக யாரோ தடையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஓபிஎஸ் ஏற்படுத்துகிறார். ஒபிஎஸ் தனக்கு அதிகாரம் வேண்டும் என செயல்பட்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!