
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் புதுக்குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (30). இவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது புவனேஸ்வரிக்கு விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
புவனேஸ்வரி 8 மாதம் கர்ப்பம்
இதனால் புவனேஸ்வரி தற்போது 8 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் பாலுவுக்கு தெரியவந்ததை அடுத்து கடும் ஆத்திரமடைந்தார். தனது மனைவி பிரிந்ததற்கு மாமியாரே காரணம் நினைத்த பாலு அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் மதுபோதையில் இருந்ததால் அவரை சரமாரியாக குத்தி படுகொலை செய்துள்ளார்.
மாமியார் இரும்பு கம்பியால் அடித்து கொலை
ஆத்திரம் தீராத பாலு இந்த பிரச்சனைக்கு காரணமான சித்தப்பா மகன் விஜய்யை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரம் அவர் வீட்டில் இல்லாததால் சித்தப்பா மற்றும் சித்தியை ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்காதல் விவகாரத்தில் மூன்று பேர் கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பாலுவை தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே இரவில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர் பாலுவுக்கு காலில் முறிவு எற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.