நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மூதாட்டி ஒருவருக்கு மின் பயன்பாடு கட்டணமாக ரூ. 25,000 ஆயிரம் செலுத்தும்படி ரசீது அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முறையாக வீட்டிற்கு சென்று கணக்கீடாமல் தோராயமாக மின் கட்டணத்தை நிர்ணயம் செய்த மின் கணகீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாதமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார் தேவகி என்ற மூதாட்டி. இவர் அங்கு வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் மின் பயன்பாடு கட்டணமாக 25 ஆயிரத்து 71 ரூபாய் செலுத்தும்படி ரசிது வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அங்கம்பக்கத்தில் விசாரித்ததில், இவரை போல் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் 15 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் வந்துள்ளது.
மூதாட்டி வீட்டில் அதிகபட்சமாக மூன்று விளக்குகள் மட்டுமே உள்ளன. வேறு எந்த மின் சாதன பொருட்களும் இல்லை. இந்நிலையில் இவருக்கு எப்படி ரூ25,071 மின் கட்டணம் வந்தது என்று சந்தேகம் எழுந்தது. இதனிடையே கடந்த மாதம் அவரது வீட்டில் இருந்த பழைய மின் மீட்டர் அகற்றப்பட்டு புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டது.
வழக்கம் போல மின் கட்டணத்திற்கான குறுஞ்செய்தி அந்த மூதாட்டிக்கு அனுப்பப்பட்டள்ளது. அதில் 25 ஆயிரத்து 71 ரூபாயை மின் கட்டணமாக செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து மூதாட்டியும், அப்பகுதி மக்களும் இணைந்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் நடத்திய விசாரணையில், மின் கணக்கீட்டாளர் ரமேஷ், நேரடியாக வீட்டிற்கு சென்று கணக்கிடாமல் அவராகவே தோராயமாக மின் கட்டணத்தை நிர்ணயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷை பணியிடை நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.