ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்... மீனவர்கள் கைதுக்கு கண்டனம்!!

Published : Apr 03, 2022, 05:16 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்... மீனவர்கள் கைதுக்கு கண்டனம்!!

சுருக்கம்

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர்களை கைது செய்தது. இன்னும் 10 நாட்களில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் இப்போதே மீனவர்கள் பலர் மீன் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் பலர் 50 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் ராமேஸ்வரம் திரும்பும் போது நெடுந்தீவு அருகே ஒரு படகை சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் அவர்களை சிறை பிடித்தது.

ஒரு படகில் இருந்த 12 மீனவர்களை கைது செய்தது. ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்ட 26 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னும் இந்தியா திரும்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதை அடுத்து எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 12 பேரையும் ஏப்.12 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சனிக்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மொத்தம் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இதனிடையே மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
சிவனும், முருகனும் இந்து கடவுளா..? பாஜகவுக்கு எதிராக சீறிய சீமான்..!