400 தமிழர்களை கடத்திய சமூக விரோத கும்பல்..! துப்பாக்கி முனையில் மிரட்டல்..? அலறி துடிக்கும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Oct 6, 2022, 11:23 AM IST

கம்போடியாவில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


வேலை தேடிச்சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி கம்போடியாவில் சிக்கி தவித்து வருவதாகவும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் அங்குள்ள சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாகவும், பட்டினி, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளை அவர்கள் அனுபவிப்பதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்த இளைஞர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.  தாய்லாந்தில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மியான்மருக்கு கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தமிழர்களில் இதுவரை 13 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில்,  அடுத்தக்கட்டமாக கம்போடியாவிலும்  தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். 

ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

Tap to resize

Latest Videos

பல லட்சம் பணம் செலுத்தி வேலை தேடி கம்போடியாவுக்கு சென்ற தமிழர்களை, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே சட்டவிரோத கும்பலிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. வேலை தருவதாகக் கூறி தமிழர்களை அழைத்து, கடத்தி விற்பதை ஒரு கும்பல் தொழிலாகவே செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது! தமிழர்களை கடத்தி வைத்துள்ள சட்டவிரோத கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவர்களிடம் பேச அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அஞ்சுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள்,  அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன என கூறியுள்ளார்.  கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்.  அவர்களை இங்கிருந்து அனுப்பியவர்கள், சட்டவிரோத கும்பலுக்கு விற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்


 

click me!