“தவறு செய்தால் கொஞ்சுவார்களா…?” – முன்னாள் சிபிஐ அதிகாரி கொந்தளிப்பு…!

First Published Dec 27, 2016, 1:29 PM IST
Highlights


மடத்தனமாக பேசுகிறார் ராம்மோகன் ராவ் என்று சிபிஐ ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், வருமான வரி சோதனைக்கு இலக்கான பின்னர், அதிரடி ரெய்டு விட்டது மத்திய அரசு. இதனால் ராமமோகன் ராவ், சஸ்பெண்ட் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சோதனை நடந்து முடிந்து 2 நாள் கழித்து திடீரென ஞானோதயம் வந்தவர் போல, ஆவேசமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராம்மோகன் ராவ்.

தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், சிஆர்பிஎஃப்பை எதற்கு குவித்தனர் எனவும் கேள்வி கேட்டார். இவரது பேச்சுக்கு, இவரது கருத்துக்கு ஒரு தொலைகாட்சி நிறுவனத்துக்கு, செல்போன் மூலம் தனது கருத்தை தெரிவித்தார் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன்,

‘ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களை, மிரட்டி கேட்காமல், கொஞ்சுவார்களா’ என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தவறை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிஆர்பிஎஃப் மீது சாடியுள்ளார். ஒரு வேளை ராமமோகன் ராவ், ஆதரவாளர்களால் அசம்பாவிதம் ஏற்பட்டால், யார் பொறுப்பாவது. இது சிபிஐ மற்றும் வருமான வரித்துறை தனி நடவடிக்கையின் அம்சங்களில் ஒன்றுதான்.

சென்சிடிவான இடங்களுக்கு சிஆர்பிஎஃப்பை அழைத்து கொண்டு சோதனை நடத்துவது என்பது நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தான். எனவே ராமமோகன் ராவின் பிதற்றல், மடத்தனமானது என் ரகோத்தமன் தெரிவித்தார்.

இதேபோல் கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயமும், ராமமோகன் ராவின் பேச்சு பைத்தியக்கார தனமானது என தெரிவித்தார்.

இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று, காத்திருப்போர் பட்டியலில் கூட வைத்திருக்க தகுதியற்றவர் ராமமோகன் ராவ் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

click me!