7 தமிழர் சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு!

By vinoth kumarFirst Published Sep 6, 2018, 1:25 PM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் 27 ஆண்டுகால சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் 27 ஆண்டுகால சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனால் 7 பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளது. 

2014-ம் ஆண்டு பேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது முதலே அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு குறித்து வலியுறுத்தப்படுகிறது. இந்த பிரிவானது குற்றவாளிகள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு உரிமை அளிக்கக் கூடியது. ஆகையால் இந்த பிரிவின் கீழ் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டது. அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு சொல்வது இதுதான்...

 

”Power of Governor to grant pardons, etc, and to suspend, remit or commute sentences in certain cases.

The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends.

இந்த அதிகாரத்தின் கீழ் மாநில அமைச்சரவையானது குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம். அமைச்சரவையின் முடிவை ஆளுநர் நிராகரிக்காமல் ஒப்புதல் வழங்க வகை செய்கிறது இந்தப் பிரிவு. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கக் கூடும். இதனடிப்படையில் 7 பேரும் விடுதலை செய்யப்படலாம். அரசியல் சாசனத்தின் இந்த 161-வது பிரிவின் கீழ் தமிழக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து.

click me!