இலக்கை அடையும் வரை இனி நிற்கப்போவது இல்லை.! மோடிக்கு பின் நாடே நிற்கிறது- ரஜினிகாந்த்

Published : May 07, 2025, 10:33 AM IST
இலக்கை அடையும் வரை இனி நிற்கப்போவது இல்லை.! மோடிக்கு பின் நாடே நிற்கிறது- ரஜினிகாந்த்

சுருக்கம்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல்

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவும் என அடுத்தடுத்து நடவடிகையை மேற்கொண்டுள்ளது.  மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடத்த  முப்படை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியது.  இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தியுள்ளது இந்தியா,

'ஆபரேஷன் சிந்தூர்'- தீவிரவாதிகள் பலி

இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியது, முசாஃபராபாத், கோட்லி மற்றும் பஹவால்பூரின் அகமது கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்  26க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவரகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மோடிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், பாகிஸ்தான் மீதான தாக்குதலை வரவேற்றுள்ளார்.  இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு போராளியின் சண்டை தொடங்கியது; இலக்கை அடையும் வரை இனி நிற்கப் போவதில்லை; மொத்த தேசமும் பிரதமர் மோடியின் பின்னால் நிற்கிறது என ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்