
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது
வரும் டிசம்பர் 9 ஆம் தேதியளவில்,வடக்குஆந்திரா,ஒரிசா கடற்கரையை நோக்கி நகர கூடும் என சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் தெரிவித்து உள்ளார்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சிவகிரியில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது
தற்போது குறைந்த தாழ்வு மண்டலம் எங்கு நிலைக்கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்