இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இதனால் கடலோரப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வடுவூர் போன்ற பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை லாலாபேட்டை, குளித்தலை மாயனூரில் மழை பெய்துள்ளது.
இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள தகவலின் படி, ‘சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’’ என எச்சரித்துள்ளனர்.