
கரூர்
கரூரில் கடந்த இரண்டு நாள்களாக இரவு முழுவதும் விடாமல் கொட்டிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாக அணைப்பாளையத்தில் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஓகி புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டமே ஓகி புயலால் முடங்கிப் போயுள்ளது.
கரூர் மாவட்டத்திலும் கடந்த புதன்கிழமை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது. பின்னர், அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்தது. இப்படி கடந்த இரண்டு நாள்களாக விடிய விடிய விடாது தொடர்ந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கரூரில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு:
கரூர் - 72.2 மில்லி மீட்டர், அரவக்குறிச்சி - 29.4 மில்லி மீட்டர், க.பரமத்தி - 73.4 மில்லி மீட்டர், குளித்தலை - 41.1 மில்லி மீட்டர், தோகைமலை - 42.5மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரம் - 66 மில்லி மீட்டர்,
மாயனூர் - 70 மில்லி மீட்டர், பஞ்சப்பட்டி - 70 மில்லி மீட்டர், கடவூர் - 41.4 மில்லி மீட்டர், பாலவிடுதி - 29.2 மில்லி மீட்டர், மைலம்பாடி - 18.5 மில்லி மீட்டர்
மொத்தம் 641.70 மில்லி மீட்டர் மழை பெய்தது.