குளு, குளு சென்னை… பிற்பகலில் இருந்து மழை… இன்று இரவும் மழை பெய்யுமாம் !!

Published : Sep 16, 2018, 10:59 PM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
குளு, குளு சென்னை… பிற்பகலில் இருந்து மழை… இன்று இரவும் மழை பெய்யுமாம் !!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து இன்று இரவும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் கடந்த பின்னரும் கத்திரி வெயில் காலம் போல் செப்டம்பர் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலான மழைப்பொழிவு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் மூன்று மணியில் இருந்து தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, வில்லைவாக்கம்  ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் , இந்த மழையால் தட்பவெப்ப நிலையில் இருந்த வெப்பம் மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவிவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மழை சென்னையின் பல பகுதிகளில்  தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள தகவல் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?