அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

சுருக்கம்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவானதை அடுத்து தமிழக

கடற்கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டன.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பர்மாவை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

தமிகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலதாமதம் ஆகலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்