
கானத்தூர் பகுதியில் செல்போன் திருடன் மற்றும் திருட்டு பொருட்களை வாங்கிய அடகுக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 2240 செல்போன்கள். ஒரு லேப்டாப் மற்றும் 10 டேப்லட்டுகள் பறிமுதல் கானாத்தூரை சேர்ந்தவர் பாண்டி (23).
அப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று பாண்டி நேற்றுக்காலை 9 மணி அளவில் கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காபி டெ கடை எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி திடீரென பாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1000 ரொக்கப்பணத்தை பறித்து சென்றார்.
இந்த வழிப்பறி குறித்து பாண்டி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர் . இந்நிலையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பாலவாக்கத்தை சேர்ந்த பிரவீன்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்று அதிகாலை உத்தண்டி சோதனைச்சாவடி அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த அவனை போலீசார் பிடித்து விசாரித்த போது அவன் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் பிரவீன் குமார் பழைய மகாபலிபஜரம் சாலை. கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றது தெரியவந்தது.
பிரவீன்குமார் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும். கானத்தூர் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும் உள்ளது.
மேலும். விசாரணையில் பிரவீன்குமார் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்களிடம் செல்போன்களை மட்டுமே வழிப்பறி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தான் வழிப்பறி செய்து திருடிய செல்போன்களை சித்தாலப்பாக்கம். மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள அடகு கடையில் விற்று வந்துள்ளான்.
இதையடுத்து போலீசார் அடகு கடை உரிமையாளர் அனுமன்ராம் (42) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அனுமன்ராமிடம் மேற்கண்ட விசாரணையில். அனுமன்ராம் வழிப்பறி ஆசாமி பிரவீன்குமார் மற்றும் இது போன்று பல திருட்டுக் குற்றவாளிகளிடமிருந்து திருழய பொருட்கள் மற்றும் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கியதும் , அதையே தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அனுமன்ராமை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து இது போன்று வாங்கப்பட்ட 2240 டசெல்போன்கள் , 1 லேப் டாப் மற்றும் 10 டேப்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரவீன் குமார் மற்றும் அனுமன் ராம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு. நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.