கனமழையால் பாதிப்பா? இந்த நம்பர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..!

 
Published : Oct 31, 2017, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
கனமழையால் பாதிப்பா? இந்த நம்பர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..!

சுருக்கம்

rain affect emergency numbers

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னையில் மழை தொடர்பாக 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 எண்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு