சென்னையில் மீண்டும் கொட்டத் தொடங்கிய கன மழை... முடங்கியது போக்குவரத்து!

First Published Oct 31, 2017, 10:15 AM IST
Highlights
heavy rain hits chennai today morning affects road traffic


சென்னையில் இன்று மழை எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்...

சென்னையில் இன்று மழை ஒரு சில இடங்களில் கனமழையாகவும், மற்ற இடங்களில் விட்டுவிட்டு மழை தொடர்ந்து பெய்யும் என்று தி தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

இந்த ஆண்டிலேயே அதிகபட்ச மழைப் பொழிவை சென்னை எட்டி இருக்கிறது. மீண்டும் கனமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள் அலுவலகம் செல்பவர்கள் சென்று விடலாம். தென் சென்னை, ஓ.எம்.ஆர்., தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பிற பகுதிகளிலும் மழை இருக்கும். 

சென்னையில் 2-வது நாளாக இன்றும் மழை இருக்கும். அடுத்த 30 நிமிடங்களில் சென்னையில் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

 இன்று மழை பொழிவு என்பது ஒரு சில இடங்களில் கனமழையாகவும், சில இடங்களில் விட்டுவிட்டும் மழை இருக்கும். இன்று முழுவதும் இதுபோல் தொடர்ந்து விட்டுவிட்டு மழைபெய்யும்.
 புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் இன்று காலையில் கனமழை பெய்து இருக்கிறது.

சென்னையில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மழையின் விவரங்கள்.
தரமணி- 193 மி.மீ
சென்னை விமானநிலையம்- 184 மி.மீ
செம்பரம்பாக்கம்- 176 மி.மீ
காட்டுப்பாக்கம்(எஸ்.ஆர்.எம். பல்கலைஅருகே)- 147 மி.மீ.
புழல்-  145 மி.மீ
அண்ணா பல்கலை- 145 மி.மீ
ரெட் ஹில்ஸ் -141 மி.மீ
சென்னை நகரம்-117 மி.மீ
சத்யபாமா பல்கலை- 116 மி.மீ
திருப்போரூர்- 100 மி.மீ
இந்துஸ்தான் பல்கலை-90 மி.மீ
எண்ணூர்- 84 மி.மீ
நாகப்பட்டினத்தில் கன மழை…
நாகப்பட்டினம், சீர்காழி பகுதிகளில் 300மி.மீ மழை பொழிவு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொள்ளிடத்தில் 225மி.மீ மழையும், மணல்மேடு 133 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் 100 மி.மீ அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.

click me!