
சசிகலா அணியில் இருந்து விலகி ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ள ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகரன் சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் வாரிய தலைவராகவும் பதவி வகித்தார்.
ஜே.சி.டி.பிராபகனுக்கு சென்னை சேத்துப்பட்டு மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன.
இதற்கிடையே சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே ஒரு விதமான பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.