நாமக்கல்லில் செப்.28 அன்று வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்... ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Sep 26, 2022, 5:19 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 28.09.2022 அன்று உலக வெறிநாய்க்கடி தடுப்புத் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருத்துவக் கல்லுரி மற்றும் நாமக்கல் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க:  சென்னையில் வாட்டி வதைத்த வெயில்… திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த மக்கள்!!

அதேசமயம் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து (105) கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை மருத்துவமனைகளிலும் மற்றும் திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லுரி கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்திலும் 28.09.2022 அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!