சென்னையில் வாட்டி வதைத்த வெயில்… திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த மக்கள்!!

By Narendran SFirst Published Sep 26, 2022, 4:35 PM IST
Highlights

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவுத்திருந்தது.

இதையும் படிங்க: இன்று 23 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

இந்த நிலையில் சென்னையில் அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனை பலரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை- மு.க.ஸ்டாலின்

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!