
அரசு அதிகாரிகளோ, எம்எல்ஏக்களோ அமைச்சரவை ஒப்புதலின்றி ஆளுநர் கிரண் பேடியை சந்திக்கக் கூடாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், கிரண் பேடி தனது அதிகார எல்லையை மீறி செயல்படுகிறார் என முதலமைச்சர் குற்றம்சாட்டி வந்தார். நாளுக்கு நாள் இருவரிடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மோதல் வெடித்துக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அரசு அதிகாரிகளோ, எம்எல்ஏக்களோ அமைச்சரவை ஒப்புதலின்றி ஆளுநர் கிரண் பேடியை சந்திக்கக் கூடாது என தெரிவித்தார்.
மேலும் ஆளுநரை எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அப்படி வந்தால் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆளுநர் கிரண் பேடி தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்தார்