அதிர்ச்சி.. ! 10,11, 12 ஆம் பொதுத்தேர்வு அனைத்து பாடங்களிலிருந்தும் வினா கேட்கப்படும்..தேர்வுத்துறை அறிவிப்பு

Published : Apr 27, 2022, 04:36 PM ISTUpdated : Apr 27, 2022, 04:38 PM IST
அதிர்ச்சி.. ! 10,11, 12 ஆம் பொதுத்தேர்வு அனைத்து பாடங்களிலிருந்தும் வினா கேட்கப்படும்..தேர்வுத்துறை  அறிவிப்பு

சுருக்கம்

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  

கடந்த மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியானது.  12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறகிறது.  அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பொதுத்தேர்வு முடிவுகள் 10  ஆம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதேபோல 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் இறுதி தேர்வு நடத்தபடவுள்ளது. 

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட்  அண்மையில் வெளியிடப்பட்டது. தன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.இதனிடையே 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10,11,12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகஅரசு தேர்வுத்துறை புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை தரப்படும்; ஆனால் அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்வி வரும் என தேர்வுத்துறை தெரிவித்தது. மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி