
தேனி
உயர் கல்வி படிக்கும் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைத்ததை எதிர்த்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் மற்றும் ஆண்டிபட்டி தேன் சுடர் பெண்கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாவட்டத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் “உயர் கல்வி கற்கும் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,
ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உயர்வுக்கு ஏற்ப, கல்வி உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்கக் கோரியும், வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்த்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்பு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் மற்றும் தேன் சுடர் பெண்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாலத்திடம் மனு கொடுத்தனர்.