"நீட் தேர்வு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும்" - வலுக்கும் எதிர்ப்பு!!

First Published Aug 17, 2017, 4:10 PM IST
Highlights
protest against neet exemption


நீட் தேர்வுக்கு ஓராண்டு மட்டும் விலக்கு என்பது சரியல்ல என்றும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்தார்.

தமிழக அரசின் சட்ட வரைவு தொடர்பாக தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் இது தொடர்பாக கூறும்போது, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குழப்பத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, நீட் மசோதாக்களுக்கு அனுமதி தரப்படுமா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை என்றும் அவர் கூறினார். பாஜக ஆளும் மாநிலத்தில் மட்டுமதான் நீட் தேர்வுக்கு ஆதரவு தருகின்றனர் என்றும் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

click me!