
மத மாற்றங்களை தடுக்க மதமாற்ற தடை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபிரகாமிய மதங்களின் (கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) கைகளில் மதமாற்றம் ஒரு தீய கருவியாக மாறிவிட்டது, அவர்கள் பணத்தையும், மிரட்டலையும் பயன்படுத்தி மக்களை இந்து மதத்திலிருந்து, தங்கள் மதத்திற்கு மாற்றுகிறார்கள், அந்த மதவாதிகள் அவர்களின் மத நம்பிக்கையை மட்டுமே கற்பிக்கிறோம் என்ற போர்வைக்குள், இந்துக்களை அவர்கள் தங்கள் மதங்களுக்கு இழுக்கிறார்கள். இதுபோன்ற கட்டாயப்படுத்தியும், மிரட்டல் மூலமாகவும், மற்றும் பணபலம் மூலமாகவும் செய்யப்படும் இத்தகைய மதமாற்றங்கள் இந்தியாவிலுள்ள பல குடும்பங்களை துண்டு துண்டாக உடைத்துள்ளன.
இத்தகைய குடும்பங்களில் இளம் தலைமுறையையும், முதிய தலைமுறையையும் இத்தகைய மதமாற்றங்கள் வெகுவாக பாதிக்கின்றன. பலருக்கு இது நிரந்தரமான மன உளைச்சல் உண்டாக்குகிறது. மதமாற்றம், மேலும் அமைதியான இந்த சமூகத்தில் குழபத்தையும், வேற்றுமையும் உண்டாக்குகிறது. இத்தகைய மத மாற்றங்களை தடுக்க ஒரு மதமாற்ற தடை சட்டம் தேவைப்படுகின்றது. மதமாற்ற சட்டத்தினால் மட்டுமே நமது தேசத்தையும், நமது கலாச்சாரத்தையும், நமது பாரம்பரியத்தையும், நமது மக்களையும் காக்க முடியும். பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்காக தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றன. தமிழக அரசு ஒரு பலமுள்ள மதமாற்ற தடை சட்டத்தை இயற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுக்கின்றது.
தமிழக அரசு தான் ஒரு மதசார்பில்லாத அரசு என்று கூறிக் கொள்ளும் பொழுது, இத்தகைய மதமாற்ற தடைச் சட்டம், அத்தகைய கோட்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் இந்துக்களுக்கு எதிரான இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் கொடுமைகளையும் தடுத்துநிறுத்த இந்த சட்டம் உதவியாக இருக்கும். கோவில்களின் சொத்துக்களை, கீழே குறிப்பிட்டுள்ள இந்து சமயம் சார்ந்த பயன்பாட்டிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்து கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக அரசை விஷ்வ இந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது. மேலும் தமிழகத்தில் இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டிக்கிறது என்று தெரிவித்தார்.