
ஜோதிகாவின் நடிப்பில், பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள படம் நாச்சியார். இதில் ஜோதிகா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த படத்தில் குற்றவாளிகளைத் தாக்கிவிட்டு ஜோதிகா பேசும் வார்த்தைகள், வாட்ஸ் அப், பேஸ்புக், வலைத்தளங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
இருந்தது.
இந்த நிலையில், நாச்சாயர் படத்தின் மற்றொரு வசனம் வெளியாகி உள்ள நிலையில் மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நாச்சியார் படத்தில் ஒரு காட்சியில் ஜோதிகா, கோயிலா இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
ஜோதிகா பேசும் இந்த வசனத்தை, இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. படத்தில் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. நாச்சியார் படம் வெளியாகியுள்ள நிலையில், பாரத் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த அமைப்பு அளித்த புகார் மனுவில், பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா, கோயிலைப் பற்றி தவறாக பேசியுள்ளார். எனவே, இயக்குநர் பாலா, நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலாவின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினர்.