ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்வு..!

By vinoth kumarFirst Published Aug 12, 2022, 8:58 AM IST
Highlights

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே, மீதமுள்ளவற்றில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதமாக உள்ளது. 

தமிழகத்தில் இன்று  முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருப்பது  பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன.

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே, மீதமுள்ளவற்றில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதமாக உள்ளது. எஅகையால், பொதுமக்களும், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்களும் தனியார் பாலினையே சார்ந்திருப்பதால் அந்நிறுவனங்கள் தன்னிச்சையாக அடிக்கடி பால் விலையை உயர்த்துவதையும், கொள்முதல் விலையை குறைப்பதையும், வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இந்நிலையில், நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், ஹட்சன் நிறுவனம் 4 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால், பால் சார்ந்த உணவு பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

click me!