தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து! அலறிய பயணிகள்! 4 பேர் பலி! பலரின் கை, கால்கள் துண்டானது!

Published : Feb 06, 2025, 01:07 PM ISTUpdated : Feb 06, 2025, 01:16 PM IST
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து! அலறிய பயணிகள்! 4 பேர் பலி! பலரின் கை, கால்கள் துண்டானது!

சுருக்கம்

திருப்பூரில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று காலை 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், ஊத்துக்குளி அடுத்துள்ள செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது திடீரெ ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தும் அதிக பாரம் காரணமாகவும் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. 

இதையும் படிங்க: இனி பழைய ஒய்வூதியம் அவ்வளவுதான்! குழு என்றாலே என்னனு எங்களுக்கு தெரியும்! கொதிக்கும் அரசு ஊழியர்கள்!

இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் மற்றும்  மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஒருசிலரின் கை, கால்கள் துண்டாகியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

மேலும் உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் ஈரோடு நந்தா கல்லூரியைச் சேர்ந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் பேருந்தின் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதே விபத்துக்கு காரணம் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க! திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை வார்னிங்!

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!