தமிழக மீன்பிடி வலை தயாரிப்பாளர் பழனிவேலுவை கட்டியணைத்த மோடி.! மகிழ்ச்சியில் கைவினை கலைஞர்கள்

Published : Sep 18, 2023, 08:54 AM ISTUpdated : Sep 18, 2023, 08:59 AM IST
தமிழக மீன்பிடி வலை தயாரிப்பாளர் பழனிவேலுவை கட்டியணைத்த மோடி.! மகிழ்ச்சியில் கைவினை கலைஞர்கள்

சுருக்கம்

விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது தமிழகத்தை சேர்ந்த மீன் பிடி வலை தயாரிக்கும் பழனிவேலுவை கட்டியணைத்த நிகழ்வு கைவினை கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

 விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் போடி தொடங்கி வைத்துள்ளார்.  கைவினை கலைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், குயவர்கள், கொல்லர்கள், மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள், சுத்தியல், பூட்டு தயாரிப்பாளர்கள்,செருப்பு தொழிலாளர்கள், காலணி தயாரிப்பாளர்கள், மாலை தயாரிப்பாளர்கள், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்கள்,  ஆயுதம் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல துறையினர் இந்த திட்டத்தில் பயனடையவுள்ளனர். 

தமிழக மீனவரை கட்டியணைத்த மோடி

இந்த நிகழ்ச்சியின் போது, கைவினைக் கலைஞர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது தமிழக மீன்பிடி வலை தயாரிக்கும்  கே.பழனிவேலுவை சந்தித்து விஸ்வகர்மா திட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பழனிவேலை கட்டியணைத்தார். இந்த கைவினை கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் எனவும், அவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களும் உலகம் முழுவதும் புதிய அடையாளத்தைப் பெறும் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். 

 

PREV
click me!

Recommended Stories

திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி