அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவு !!

Published : May 14, 2023, 03:52 PM IST
அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவு !!

சுருக்கம்

அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் கட்டாயம் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்‌ எப்போதும்‌ இல்லாத வகையில்‌ ஏப்ரல்‌ முதல்‌ செப்டம்பரில்‌ முடிய உள்ள கோடையில்‌ குறுவை, முன்சம்பாப்‌ பருவத்திற்குத்‌ தேவையான மொத்த உரத்‌தேவையில்‌ 43 சதவீத உரங்கள்‌ தற்போது மாநிலத்தில்‌ இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, யூரியா தேவையில்‌ 39சதவீதமும்‌, டிஏபி தேவையில்‌ 50 சதவீதமும்‌, காம்ப்ளக்ஸ்‌ தேவையில்‌ 60 சதவீதமும்‌, சூப்பர்‌ பாஸ்பேட்‌ தேவையில்‌ 38 சதவீதமும்‌ இருப்பு உள்ளது. பொட்டாஷ்‌ உரத்தைப்‌ பொறுத்தவரை, வெளிநாடுகளில்‌ இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான பொட்டாஷ்‌ உரம்‌ நியூ மங்களூர்‌ துறைமுகத்தில்‌ இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

இது மட்டுமல்லாது, மே மாதம்‌ 3-ம்‌ வாரத்திற்குள்‌ 43, 000 டன்‌ இறக்குமதி பொட்டாஷ்‌ உரத்தை தூத்துக்குடி துறைமுகத்தின்‌ மூலம்‌ கொண்டு வரவும்‌ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அனைத்து உரப்‌ பைகள்‌ மீதும்‌ உரங்களின்‌ அதிகபட்ச சில்லறை விலை அச்சிடப்பட்டுள்ளதால்‌, விவசாயிகள்‌ உரிய தொகையை செலுத்தி விற்பனை முனையக்‌ கருவியில்‌ பட்டியலிட்டு வாங்கிக்‌ கொள்ளலாம்‌.

கூடுதல்‌ விலைக்கு உரம்‌ விற்பனை செய்தல்‌, உர விற்பனையின்‌ போது விவசாயிகளுக்கு தேவைப்படாத இணை பொருட்களையும்‌ வாங்குவதற்கு கட்டாயப்படுத்தல்‌, விற்பனை பட்டியல்‌ இல்லாது உர விற்பனை செய்தல்‌, உரம்‌பதுக்கல்‌, உரம்‌ கடத்தல்‌ போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில்‌ யாரேனும்‌ ஈடுபட்டால்‌ அது குறித்து சென்னை வேளாண்மை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ செயல்படும்‌ உர உதவி மையத்திற்கு 9363440360 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு தங்கள்‌ புகாரை வாய்மொழியாகவோ அல்லது வாட்ஸ்‌ அப்‌ குறுஞ்செய்தி மூலமாகவோ அரசுக்கு தெரிவிக்கலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!