கரையை நெருங்கிய மோக்கா புயல்.! 190 கி.மீ வேகத்தில் காற்று வீசும்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலைமையம்

Published : May 14, 2023, 08:42 AM IST
கரையை நெருங்கிய மோக்கா புயல்.! 190 கி.மீ வேகத்தில் காற்று வீசும்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலைமையம்

சுருக்கம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த மோக்கா புயல் இன்று நண்பகல் கரையை கடக்கும் போது 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோக்கா புயல் தீவிரம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மோக்கா புயலாக உருமாறியுள்ளது. இந்த மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நான்காம் வகை சூறாவளிக்கு சமமானது என கூறப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது 220 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த புயல் இன்று நண்பகல் மியான்மரின் சித்வே மற்றும் காஸ் பஜார் இடையே கரையை கடக்கும் என கூறப்படுகிறது.  மோக்கா புயலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மியான்மரின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

190 கி.மீ வேகத்தில் காற்று

வங்க தேசம் மற்றும் மியான்மர் கடற் பகுதியில் 2 லிருந்து 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் எழும்பும் தென் கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. அதே நேரத்தில் புயலின் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு இல்லையென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்த போதும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

அமைச்சர் பொன்முடி செயல் மகிழ்ச்சி அளிக்கிறது..! ஒரு வாரத்தில் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்- அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
காவல்துறைக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு சொன்ன ஸ்வீட் நியூஸ்.. என்ன விஷயம்?