சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

Published : Sep 13, 2023, 04:32 PM IST
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

சுருக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை  மத்திய அரசு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது.

ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டோம்: உறுதிபடுத்திய எலான் மஸ்க்!

இதையடுத்து, ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகிய ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான கொலீஜியம் இந்த பரிந்துரையை  செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!