மருத்துவர்களின் போராட்டம் வீண்! ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது!

Published : Feb 08, 2025, 03:27 PM ISTUpdated : Feb 08, 2025, 03:37 PM IST
மருத்துவர்களின் போராட்டம் வீண்! ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது!

சுருக்கம்

திருப்பதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளியதால் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண். இவரும் இவரது கணவரும் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இன்சிர் சிட்டி விரைவு ரயிலில் நேற்று முன்தினம் கர்ப்பிணி பயணம் மேற்கொண்டார். ரயில் கே.பி. குப்பத்தை நெருங்கும் போது கர்ப்பிணி பெண் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். 

அப்போது கழிப்பறை அருகே மறைந்திருந்த இளைஞர் கர்ப்பணி பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கர்ப்பிணி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேறு பெட்டிக்கு மாறியுள்ளார். இதனை கண்ட சக பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஹேமராஜை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டதில் கர்ப்பணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டதால் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று விட்டதை அடுத்து இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்