மின் தடைக்கு தயாராகுங்கள் சென்னை மக்களே…மே மாதம் முதல் கடும் மின்வெட்டு...

First Published Mar 1, 2017, 8:29 AM IST
Highlights
Power cut in chennai


தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப்  போனதால் நீர்மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது.அதே நேரத்தில் இந்த ஆண்டு வரலாறு  காணாத அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளன. தென் மாவட்டங்களில் இருந்தே காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மின்சாரம் கொண்டுவரப்பட வேண்டும்,

இதற்காக தூத்துக்குடி,கயத்தாறு,காஞ்சிபுரம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 400 கிலோவாட் திறன் கொண்ட வழித்தடம் அமைக்கும் பணி முடிவடைந்தது. இதனையடுத்து சிறுசேரி பகுதியில் மின்கோபுரம் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கோடை காலத்தில் மின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மே மாதம் மிக அதிகமான மின் தேவை இருப்பதால் சென்னையில் கடுமையான மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!