இன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை…வணிகர் சங்கங்கள் திட்டவட்ட அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Mar 01, 2017, 07:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
இன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை…வணிகர் சங்கங்கள் திட்டவட்ட அறிவிப்பு…

சுருக்கம்

No sales of Pepsi and coke

இன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை…வணிகர் சங்கங்கள் திட்டவட்ட அறிவிப்பு…

மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடைகளில் பெப்சி,கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள்  விற்பனை செய்ய மாட்டாது என என்ற வணிகர் சங்கங்கள் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள், உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய, வெளிநாட்டு குளிர்பான விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து  வியாபாரிகள் சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து, 'மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை நிறுத்தப்படும் என்றும் பிப்ரவரி மாதம் முழுவதும், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
வணிகர்களின் இந்த  அறிவிப்புக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இளைஞர்களும் சமூக வலைதளங்களில், அன்னிய குளிர்பானங்கள் அருந்துவதை  தவிர்க்குமாறு, தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் என வணிகர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலை வர் விக்கிரமராஜா, வெளிநாட்டு குளிர்பான விற்பனைக்கு தடை என்ற முடிவில், வியாபாரிகளுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பொது மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

ஆனாலும் இன்று முதல் வெளிநாட்டு குளிர்பனங்கள் விற்பனை நிறுத்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

இன்று முதல் கடைகளில், 'வெளி நாட்டு குளிர்பானங்கள் விற்பதில்லை' என்ற கடைகளில் விளம்பர பலகை வைக்கப்படும். என்றும் விக்கிரம ராஜா  தெரிவித்தார்.

 

 
 

 

 

PREV
click me!

Recommended Stories

மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!