
தீபா பேரவைக்கு கொடுக்கப்படும் நெருக்கடி.சிலைகள் இடிக்கப்பட்டதால் பரபரப்பு…
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இன்று அதிகாலை திடீரென அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்கள் அவருக்க ஆதரவி அளிக்கவில்லை.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் செயல்படுவோம் என ஏராளமான அதிமுகவினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டது.
ஜெ.அண்ணன் மகள் தீபாவும் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த தீபா பேரவையினர் கடந்த மாதம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அனுமதியின்றி வைத்தனர்.
கடந்த 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது. அந்த சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டதால் அவற்றை அகற்ற வேண்டும் போலீசார் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே இன்று அதிகாலை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை காவல் துறையினர் இடித்துத் தள்ளினர்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் யாரும் இல்லா அதிகாலை நேரத்தில் போலீசார் இடித்துக் தள்ளியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.