சசிகலா புஷ்பா மீது பாலியல்  புகார் அளித்த சகோதரிகள் - பொய்யானது என அந்தர் பல்டி 

 
Published : Feb 28, 2017, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
சசிகலா புஷ்பா மீது பாலியல்  புகார் அளித்த சகோதரிகள் - பொய்யானது என அந்தர் பல்டி 

சுருக்கம்

Sasikala Pushpa sexual harassment on the sisters - to be false backtrack hundredweight

சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த சகோதரிகள் அந்தர் பல்டி அடித்து தாங்கள் அரசியல் காரணங்களுக்காக  போலி புகார் அளித்தாக போலீசில்  மனு அளித்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர்.

சசிகலா மீது எம்.பி. சசிகலா புஷ்பா மீதும் அவரின் கணவர்,மகன் ஆகியோர் மீது  தூத்துக்குடியில் இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி  வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் எம்.பி. சசிகலாபுஷ்பா மற்றும் அவரின்  குடும்பத்தினர் 'எங்களை பாலியல் தொந்தரவு செய்தார்கள்' என்றும் 'எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் அளித்திருந்தனர்.

அவர்கள் புகாரில் திசையன்விளை ஆணைகுடி ஊரைச் சேர்ந்த நானும் எனது அக்காள் ஜான்சிராணியும் கடந்த 2011-ம் வருஷம் சென்னையில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டு வேலைக்குப்  போனோம். 

பின்னர் தூத்துக்குடி மேயர் ஆனவுடன் அவர், எங்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார்.  சில சமயம் சசிகலாபுஷ்பா மசாஜ் பண்ணிவிட சொல்லுவார். மசாஜ் சரியாக பண்ணவில்லை என்றால் அசிங்கமாக பேசி காலால் எட்டி மிதிப்பார். அதே போல் அவரது கணவரும்  மசாஜ் பண்ண சொல்லி கொடுமைப்படுத்துவார். சசிகலாபுஷ்பாவின் மகன் பிரதீப் செக்ஸ்டார்ச்சர் கொடுத்தான்.

2015-ம் வருஷம் சசிகலாபுஷ்பாவின் அம்மா கெளரி சென்னைக்கு வீட்டிற்கு வந்தார். அந்த சமயம் நான் விட்டைவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தேன்.  அவங்க அம்மா கெளரி உட்பட பலரும் சேர்ந்து என்னை அடித்து மிதித்தார்கள்  என்று புகார் அளித்தனர். 

சசிகலாபுஷ்பா, எம்.பி என்கிற அதிகாரத்தோடு இருந்ததால் உயிருக்கு பயந்து இதை யாரிடமும் நாங்கள் சொல்லவில்லை.

அவர் சம்மந்தமாக பல புகார்கள் சொல்லப்பட்டு வருவதால் நானும் புகார் கொடுக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பின்னர் பத்திரிக்கைகளில் மேலும் பல திடுக்கிடும் புகார்களை அளித்தனர். இதையடுத்து சசிகலா புஷ்பா , அவரது கணவர் , மகன் , தாயார் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சசிகலா முன் ஜாமீன் பெற்றார். இதனிடையே ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா , ஓபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட சசிகலா புஷ்பா விவகாரம் சாதாரணமானது.

இதற்கிடையே சசிகலா புஷ்பா மீது பரபரப்பு பாலியல் புகார் அளித்த சகோதரிகள் திடீரென அந்தர் பல்டி அடித்து புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். கடந்த வாரம் திடீரென  புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த  சகோதரிகள் இருவரும் தங்கள் புகாரை வாபஸ் வாங்குவதாக எழுதி கொடுத்தனர்.

அரசியல் லாபத்திற்காக சில நபர்கள்  பொய்யான புகாரை கொடுக்க வைத்தனர். நாங்கள் கடந்த ஆகஸ்ட் 8 அன்று கொடுத்த புகாரில் உள்ள அனைத்து சங்கதிகளும் பொய்யானவை ,  உண்மையில் நடைபெறாத ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியதால் ஒரு பெண்ணான எங்களுக்கு சமூகத்தில் நடக்கவே கேவலமாக இருக்கிறது.

சசிகலா புஷ்பா குடும்பத்தினர் உண்மையிலேயே எங்களை நல்லபடியாக பார்த்து கொண்டனர் , அவர்கள் விவகாரத்தில் அரசியல் லாபங்களுக்காக அளித்த புகார் அதை வாபஸ் வாங்கிகொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!