
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் பாஜகவுக்கு திமுக அரசு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக, பாஜக இடையேயான போர் மூர்க்கம் பெற்றுள்ளது.
அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அண்மை காலமாக மத்திய அரசை விமர்சிக்கும் முதல்வர் பெரும்பலான மேடைகளில் எந்த ஷா வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணைமுதல்வர் உதயிநிதி ஸ்டாலினும் மாறி மாறி பேசி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில், “எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் குஸ்கா தான்” என்று குறிப்பிட்டு பெரும்பாலான இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. கோவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.