அஞ்சல் துறை ஊழியர்கள் 9-வது நாளாக போராட்டம்; கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?

 
Published : May 31, 2018, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
அஞ்சல் துறை ஊழியர்கள் 9-வது நாளாக போராட்டம்; கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?

சுருக்கம்

Postal Service employees protest for 9th day

கன்னியாகுமரி

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் 9-வது நாளாக தங்களது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க கன்னியாகுமரி கோட்டம் மற்றும் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கடந்த 22–ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதிய குழுவில் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திராகுழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த கோரி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளவர்கள், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் வெவ்வேறு போராட்டங்களை கையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் போராட்டம் 9–வது நாளான நேற்றும் நீடித்தது. இதையொட்டி அனைத்து ஊழியர்களும் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கன்னியாகுமரி கோட்ட செயலாளர் சுபாஷ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சுகுமாரன், தேவ செல்வன், பிரசாந்த், ஐசக், வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்