
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு சுட்டிக்காட்ட அஞ்சல் ஊழியர் சங்கத்தினரின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் அஞ்சலக ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
இராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பும் நேற்று காலை அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, என்.எப்.பி.இ.ஜி.டி.எஸ் ஆகிய பிரிவுகளின் இராணிப்பேட்டை கிளையின் சார்பில் போராட்டம் நடந்தது.
“ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளத்தை மாற்ற கோருதல்,
2004–ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருதல்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அஞ்சலக ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இராணிப்பேட்டையில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சங்கங்களின் தலைவர்கள் நரசிம்மன், ஆனந்தன், மனோகரன் உள்பட சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.