பாலத்தை உடைத்துக் கொண்டு போரூர் ஏரியில் தவறி விழுந்த தந்தை, மகள்….உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு !!

Asianet News Tamil  
Published : May 04, 2018, 01:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
பாலத்தை உடைத்துக் கொண்டு போரூர் ஏரியில் தவறி விழுந்த தந்தை, மகள்….உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு !!

சுருக்கம்

Porur lake 2 persons fell into the lake policeman save them

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலை பாலத்தை உடைந்துக்கொண்டு மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு போருர் ஏரிக்குள்  விழுந்த  தந்தையையும், மகளையும் போக்குவரத்து காவலர் ஒருவர் நீரில் குதித்து உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய வம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள ஒரு சாலை. மதுரவாயலையும் தாம்பரத்தையும் இணைக்கும் இந்தச் சாலையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் இந்தப் பாலத்தில் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக  மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் அவரது மனைவி கீழே விழுந்தார். மோட்டார் பைக் பாலத்தின் சுவற்றில் மோதிய வேகத்தில் அந்த இளைஞரும் அவரது குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

இருவரும் போரூர் ஏரியில் தண்ணீரில் விழுந்தனர். விழுந்தவுடன் இருவரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அவரது மனைவி அலறினார். சாலையில் சென்றவர்கள் திகைத்து நின்றனர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய போக்குவரத்து தலைமைக் காவலர் வெங்கடேசன் உடனடியாக ஏரியில் குதித்தார். ஏரியில் மூழ்கிகொண்டிருந்த இருவரையும் காப்பாற்றினார்.

உடனடியாக இன்னொரு காவலரும் துணைக்கு வர அங்குள்ள நரிக்குறவர்களும் உதவி செய்ய உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இருவரையும் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய போக்குவரத்து தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டினர்.

அவரது மனைவியும் போக்குவரத்து போலீஸ் வெங்கடேசனை கையெடுத்துக் கும்பிட்டார். ஏரியில் நீந்திச் சென்று, உயிருக்குப் போராடிய இருவரை காப்பாற்றிய நிகழ்வு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
திமுகவை காப்பி அடிக்கும் இபிஎஸ்.. திராவிட மாடல் ஆட்சி 2.0 கண்பார்ம்.. அமைச்சர் ரகுபதி விளாசல்..