பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. அடுத்தடுத்து டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட்
பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. 120 நாட்களுக்கு முன்னர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் வழங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னதாகவே அதாவது ஜனவரி 11ஆம் தேதி ( வியாழன் ) பயணம் செய்வதற்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையை கொண்டாட அதாவது ஜனவரி 11 ஆம் தேதி ( வியாழன் ) சொந்த ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்காக சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய பயணிகள் வீட்டில் இருந்து இணையதளம் மூலமாகவும், டிக்கெட் கவுண்டர்களுக்கும் சென்று காத்திருந்தனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு
இதனையடுத்து காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கிய சில நிமிழடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தது. சில நொடிகளிலேயே பெரும்பாலான ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று முன்பதிவு தொடங்கிய அடுத்த நொடிகளிலேயே நெல்லை எக்ஸ்பிரஸ் , முத்து நகர் எக்ஸ்பிரஸ் , பொதிகை எக்ஸ்பிரஸ் , பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் வெற்றி தீர்ந்தன.
ஒரு சில நிமிடங்களில் காலியான டிக்கெட்
காலை 3 மணி முதல் சென்னையில் கவுண்டரில் டிக்கெட் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை ) சொந்த ஊர் செல்பவர்கள் நாளையும் , ஜனவரி 13ஆம் தேதி ( சனிக்கிழமை ) சொந்த ஊர் செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி , ஜனவரி 14-ம் தேதி ( ஞாயிறு ) போகி அன்று சொந்த ஊர் செல்பவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்ய உள்ளனர்.
இதையும் படியுங்கள்
மக்களே பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா.. அப்படினா இன்று முதல் தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு.!