பொங்கல் பண்டிகை... தொடங்கிய வேகத்தில் முடிந்த முன்பதிவு! 13-ம் தேதி வரை ஓவர்…

Published : Sep 14, 2018, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
பொங்கல் பண்டிகை... தொடங்கிய வேகத்தில் முடிந்த முன்பதிவு! 13-ம் தேதி வரை ஓவர்…

சுருக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழர் திருநாளான தைப் பொங்கல் வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகை நாளில் வெளியூர்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம். அவர்கள் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதேபோல் ஜனவரி 13ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளையும், 14ம் தேதிக்கான முன்பதிவு ஞாயிற்றுகிழமையும், 15ம் தேதிக்ககான முன்பதிவு திங்கட்கிழமையும்  தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இன்று காலை வெளியூர் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளின் முன் பதிவு தொடங்கியது.தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!