இந்த முறை பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாது! கைவிரித்த தமிழக அரசு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

By vinoth kumar  |  First Published Dec 28, 2024, 7:11 PM IST

Pongal Gift: தமிழக அரசு 2025 தைப்பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்குகிறது. 2.20 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு  ஆண்டும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்பட்டது.

ஆனால், இந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு இடம் பெற்றுள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 இடம் பெறவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

click me!