'பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டுடன் தான் நடைபெறும்' - தமிழிசை உறுதி

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 07:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
'பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டுடன் தான் நடைபெறும்'  - தமிழிசை உறுதி

சுருக்கம்

வரும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஜல்லிக்கட்டுடன் தான் நடைபெறும் என பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாரஜகவின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜக வெகுவாக வளர்ந்து வருவதாகவும், அதனால்தான் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்க்பபட்டவுடன் 3 தொகுதிகளுக்கும் பாஜகதான் முதலில் வேட்பாளர்களை அறிவித்தது என தெரிவித்தார்.

மேலும், 3 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்கள் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நியமித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என குற்றம்சாட்டினார்.

மேலும், வரும் பெங்கல் விழா தமிழகத்தில் ஜல்லிக்கட்டுடன் தான் நடைபெறும் என்றும், அதற்காக மத்திய அமைச்சர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதகாவும் உறுதியாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!
டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!