ரூட்டு தல பிரச்சனையில் பஸ் கண்ணாடி உடைப்பு - தலைமறைவு மாணவர் கைது

First Published Oct 25, 2016, 7:16 AM IST
Highlights


சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட ரூட்டு தல மோதலில் அந்த வழியாக வந்த பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது . இதில் அதிகம் பாதிக்கப்படுவது பேருந்துகளும் , பயணிகளும் தான். 

கடந்த 18 ஆம் தேதி  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யார் பெரியவர் என்ற போட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் , நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை தாஷப்பிரகாஷ் ஹோட்டல் அருகே இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இதில் அந்த வழியாக வந்த பாரிமுனையிலிருந்து கோயம்பேடு செல்லும் 15 B  பேருந்து கல் வீசி தாக்கப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது , இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். 

தகவல் அறிந்து வந்த கீழ்பாக்கம் போலீசார் 22 மாணவர்களை பிடித்தனர். இதில் விஜய் என்கிற நந்தனம் கல்லூரி மாணவர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது .அவனை மட்டும் கைது செய்த போலீசார் மற்றவர்களை விடுவித்தனர்.

பின்னர்  நந்தனம் கல்லூரி மாணவர்கள்  அசோக் , முரளிதரன்  ஆகியோரை கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில்  தாக்குதலில் ஈடுபட்ட  நந்தனம் கல்லூரி மாணவர் தமீம் அன்சாரியை கீழ்பாக்கம் போலீசார் இன்று கைது செய்தனர் . 

click me!